×

டாஸ்மாக் ஊழியருக்கு கொரோனா உறுதி குடிமகன்கள் பீதி

சென்னை: கேளம்பாக்கத்தில் டாஸ்மாக்  ஊழியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் குடிமகன்கள் பீதி அடைந்துள்ளனர். கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சாத்தங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 19ம் தேதி முதல் சென்னைக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதி என்பதால் நாவலூர், படூர், கேளம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளும் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு வரை அவர் கோவளம் சாலையில் உள்ள கடையில்தான் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவருடன் பல டாஸ்மாக் கடை ஊழியர்களும் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும், அவரிடம் மது வாங்கிய  குடிமகன்களும் அச்சத்தில் பீதி அடைந்துள்ளனர்.


Tags : citizens ,Corona ,task force ,Tasmac , Tasmac, Corona, Citizens, Panic
× RELATED ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதில்...