×

வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட வேண்டும்: பிரசவத்துக்கு 4,5 நாளுக்கு முன் கர்ப்பிணிகள் கொரோனா பரிசோதனை செய்வது நல்லது: வழக்கமான தடுப்பூசியை நிறுத்தக்கூடாது: பச்சிளங்குழந்தை சிறப்பு நிபுணர் ஆலோசனை

சென்னை: கர்ப்பிணிகள் வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட வேண்டும். பிரசவத்துக்கு 4, 5 நாட்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை எடுப்பது நல்லது என்று பச்சிளங்குழந்தை சிறப்பு நிபுணர் டாக்டர் மாதுரி பிரபு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து, பச்சிளங்குழந்தை சிறப்பு நிபுணர் டாக்டர் மாதுரி பிரபு கூறியதாவது: பொதுவாகவே மற்றவர்களை விட கர்ப்பிணிகளுக்கு இம்மினிட்டி பவர் குறைவாக இருக்கும். கொரோனா வருவது ரொம்ப ஜாஸ்தி. எனவே, வீட்டில் இருப்பவர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க  வேண்டும். வெளியில் இருந்து பொருட்களை வாங்குவதோ, சாப்பிடுவதோ கூடாது. வீட்டிலேயே தயாரித்து சாப்பிட வேண்டும். அதுவும் சூடாக சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னரும், சமையல் செய்வதற்கு முன்னரும் கைகளை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். அசைவ உணவாகவே இருந்தாலும் நல்லா சமைத்து சாப்பிட வேண்டும். இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

குழந்தைகள் வீட்டில் வந்தாலும் இதனை கடைபிடிக்க வேண்டும். வெளியில் இருந்து வாங்கும் காய்கறிகளை நன்றாக கழுவ ேவண்டும். மஞ்சள் தூள் போட்டு கழுவுவது ரொம்ப நல்லது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது. கொரோனா நேரத்தில் போய் தடுப்பு ஊசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். அப்படி எல்லாம் இருக்கக்கூடாது. எந்த நேரத்தில் எந்த தடுப்பூசி போட வேண்டுமோ, அதனை கட்டாயம் போட வேண்டும். சென்னையில்  கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெஸ்டிக் அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணம். கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ளவர்களுக்கு நிறைய பேருக்கு இருக்கிறது. அவர்கள் டெலிவரி சமயத்தில் வெளியே வரும் போது அது தெரிகிறது. டெஸ்டிக்கால்தான் நிறைய கர்ப்பிணிகளுக்கு கொரோனா இருப்பது தெரியவருகிறது. பச்சிளங்குழந்தைகளுக்கு ரொம்ப அபூர்வமாகத்தான் சொல்ல போனால், மூச்சுத்திணறல் மட்டும் இருக்கிறது. அம்மாவுக்கு பாசிட்டிவ் இருந்தாலும் குழந்தைகளுக்கு  எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. தாயிடம் இருந்து குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி வரும்.

அமெரிக்கா, யுகே உள்பட எந்த நாடுமே இதை ரிப்போர்ட் பண்ணவில்லை. கடந்த 4 மாதத்தில் இது மாதிரி  எந்த ரிப்போர்ட்டும் வரவில்லை. இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது. வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகள் வீட்டில் நடப்பது, முடிந்தவரை வீட்டு வேலை செய்வது போன்றவற்றை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 10 நிமிடம் உடற்பயிற்சி செய்வது நல்லது. சமைக்கும் போது இஞ்சி சேர்த்துக்கொள்வது நல்லது. மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை, காய்கறி, பழங்கள் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சாப்பிடலாம்.

கொரோனாவுக்கு பிறகு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்வது குறைந்து விட்டது. ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பெற்றோர் முதலில் சிசேரியன் பண்ணி குழந்தையை எடுத்து விடுங்கள் என்று சொன்னார்கள். நார்மல் டெலிவரி வேண்டாம் என்று கூறி வந்தனர். தற்போது அவர்கள் கூட சிசேரியன் வேண்டாம், நார்மல் டெலிவரி பார்க்கலாம் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இது பெற்றோர் தரப்பிலும் அதிகரித்துள்ளது. டாக்டர்கள் தரப்பிலும் அறுவை சிகிச்சை செய்வதை கம்மி பண்ணி விட்டார்கள்.

டெலிவரிக்கு 4, 5 நாட்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்வது நல்லது. பாசிட்டிவாக இருந்தால் அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிக்க முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். அதை விட்டு கர்ப்பிணிகள் 10 நாட்கள், 15 நாட்கள் முன்னர் பரிசோதனை செய்வதால் எந்த பலனும் கிடையாது. அப்போது நெகட்டிவ் காட்டியிருந்தால், கொஞ்சம் நாள் கழித்து பாசிட்டிவ் இருந்தாலும் தெரியாது. எனவே, டெலிவரிக்கு 4, 5 நாட்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்வது நல்லது. முன்னர் வீட்டிற்குள் நுழையும் போது  செருப்பை வெளியே கழற்ற வேண்டும். கை, கால்களை கழுவி பின்னர் தான்  வீட்டிற்கு வர வேண்டும் என்பது இருந்தது. இது பழங்காலப் பழக்கம் என்று தூக்கி போட்டோம். இப்போது அதன் முக்கியத்துவம் நமக்கு தெரிய தொடங்கியுள்ளது. இவ்வாறு டாக்டர் மாதுரி பிரபு கூறினார்.


Tags : women ,delivery ,Specialist ,Corona Testing , Pregnancy, Corona Testing, Specialist, Consulting
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்