×

10 லட்சம் ரசிகர்களை கொண்ட டிக் டாக் சிறுமி தற்கொலை

புதுடெல்லி: டெல்லியில் 16 வயதுடைய பிரபல டிக்  டாக் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிழக்கு டெல்லி கீதா காலனிய சேர்ந்த 16 வயது  சியா டிக் டாக் செயலில் மிகவும் பிரபலமானவர். இவரது டிக் டாக் செயலி மூலம் 10 லட்சம் பேர் இவரை பின்பற்றுகிறார்கள். மேலும் இன்ஸ்டாகிராமில் 1.35 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், சிறுமியின் அறைக்கு அவரது தந்தை சென்று பார்த்திருக்கிறார். அப்போது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது சிறுமி இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை அருகில் உள்ள சுப்சி மண்டி சவக்கிடங்கிற்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. டிக்டாக் சிறுமி எதற்காக இறந்தார் என்பது தெரியவில்லை. அவரது சடலம் அருகில் தற்கொலை குறித்த எந்த கடிதமும் இல்லை. இதுபற்றி வழக்குப் பதிவு  செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : fans ,Tic Tac ,suicide , tiktok girl, suicide
× RELATED அனைத்து விதமான கிரிக்கெட்...