×

அங்கேயும் குப்பை போட்டாச்சு: விண்வெளியில் கண்ணாடியை தவற விட்ட விண்வெளி வீரர்

கேப் கெனாவரல்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு வெளியே நாசா விண்வெளி வீரர் ஒருவர் தனது கை கண்ணாடியை தவற விட்ட அரிதான சம்பவம் நடந்துள்ளது. பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த கிறிஸ் கஸ்சிடி, ரோபர்ட் பென்கென் உள்ளிட்டோர் தங்கி உள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரிகளுக்கு பதிலாக அதிக சக்தி வாய்ந்த லித்தியம் அயன் பேட்டரிகள் மாற்றப்படும் பணி கடந்த 2017ல் இருந்து நடந்து வருகிறது.

இந்த பணியின் போது வீரர்கள் விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, கஸ்சிடி, பென்கென் இருவரும் நேற்று முன்தினம்  ஆய்வு மையத்துக்கு வெளியே வந்து  பேட்டரி மாற்றினர். பின்னர், திரும்பிய போது கஸ்ஸிடியின் கை மணிக்கட்டில் கட்டியிருந்த கண்ணாடி காணாமல் போயிருந்தது. விண்வெளி வீரர்கள் பணியின் போது கை மணிக்கட்டில் கடிகாரம் போன்ற கண்ணாடியை அணிவது வழக்கம்.இந்த கண்ணாடி தான் விண்வெளியில் குப்பையாக விழுந்திருப்பது தெரியவந்துள்ளது.


Tags : astronaut ,space , Space, glass, astronaut
× RELATED மனவெளிப் பயணம்