×

நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்: மோடி திட்டத்துக்கு ஐநா கண்டிப்பு: நல்ல விஷயமாக இருக்க முடியாது என கவலை

ஐநா: நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் மத்திய அரசின் திட்டத்தை ஐநா பொதுச் செயலாளர் கடுமையாக கண்டித்துள்ளார். நிலக்கரி துறையில் தனியாரை அனுமதிக்க, 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறையை பிரதமர் மோடி கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் நிலக்கரி ஏற்றுமதியில் இந்தியா உலகின் நம்பர்-1 நாடாக மாற வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிராக ஐநா கடந்த 3 மாதமாக எடுத்த பல நடவடிக்கைகள் மூலமாக இன்று சிறப்பாக மீள்வதற்கான பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், எவையெல்லாம் இந்த நெருக்கடிக்குக் காரணமோ, மீண்டும் அதே நடவடிக்கைகளுக்கு நாம் திரும்பிச் செல்ல முடியாது. எந்தவொரு நாடும் (இந்தியா) தனது கொரோனா மீட்புத் திட்டங்களில் நிலக்கரியை சேர்க்க எந்த நல்ல காரணமும் இருக்க முடியாது. இது, சுற்றுச்சூழலை கெடுக்காத, பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றாத தூய எரிசக்தி முறைக்கு நாம் செல்ல வேண்டிய காலக்கட்டம். ஒரு நாகரீகமான வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டுமே தவிர , மீண்டும் சுற்றுச்சூழல் தீங்குக்கு காரணமாகும் ஒன்றுக்கு திரும்பிச் செல்லக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : UN ,Modi , Coal Mines, Auction, Modi, UN, Strict
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது