×

சிபிஎஸ்இ தேர்வு ரத்து உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி:  கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள், 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளது. இதேபோல், நிலுவையில் உள்ள சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 17ல் விசாரணைக்கு வந்தபோது, தேர்வுகளை ரத்து செய்வது பற்றி பரிசீலிக்கும்படி சிபிஎஸ்இ.க்குநீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அதன்படி, தேர்வுகளை ரத்து செய்வதாக நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு் வந்தபோது,  நீதிபதிகள் கன்வீல்கர் தலைமையிலான அமர்வு, இதறகு ஒப்புதல் அளித்தது. இதனால், தேர்வுகள் ரத்தாகின்றன.Tags : CBSE ,Supreme Court , CBSE Examination, Cancellation, Supreme Court, Approval
× RELATED இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர்...