×

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்புகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. காஞ்சிபுரம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது கொரோனோ ஊரடங்கால், மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பல்வேறு போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவரும், எளிதில் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ஆன்லைன் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் 044-27237124 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயன் பெறலாம்.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல் மின்னணு பாட குறிப்புகள், மின் புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வு வினாத் தாள்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தில் வரும் பாடக் குறிப்புகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இதில் மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் விவரங்களுக்கு துணை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Competition selection, online free tutorials, classes
× RELATED பொறியியல் இறுதியாண்டு தேர்வை...