×

மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் நிகழ்த்திய தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இணையவழி போராட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தில் நடந்தது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைனுல் ஆபிதீன், மாவட்ட துணை தலைவர் சம்சுதீன், தமுமுக ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், கிளை தலைவர் தாவுத், செயலாளர் அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சபியுல்லா,  மூத்த  தலைவர் பீர் ராவுத்தர் ஜாஹிர்  உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையில் தமுமுக மாவட்ட செயலாளர் தாஜூதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மமக மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : People's Party ,protests ,protest , Humanitarian People's Party, protest
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி...