×

சிறப்பு எஸ்ஐ, ஏட்டுக்கு கொரோனா:காஞ்சி டிஎஸ்பி அலுவலகம் மூடல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலக சிறப்பு எஸ்ஐ, ஏட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், காஞ்சி டிஎஸ்பி அலுவலகம் மூடப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகில் காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலகம் செயல்படுகிறது. இங்கு டிஎஸ்பி உள்பட 10 போலீஸ்காரர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறப்பு எஸ்ஐ, ஏட்டு ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக, டிஎஸ்பி அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. டிஎஸ்பி அலுவலகம் தற்காலிகமாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உறுதியான 611 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 14 பேர் இறந்தனர். காஞ்சிபுரத்தில் 21, பெரும்புதூரில் 31, குன்றத்தூரில் 32, மாங்காட்டில் 4, உத்திரமேரூரில் 2, வாலாஜாபாத்தில் 4 பேர் உள்பட 96 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் 14,  பாதிக்கப்பட்டோர் 1529 என உயர்ந்துள்ளது. இதில் 611 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 828 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருப்போரூர்:  திருப்போரூர் ஒன்றியத்தில்  கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையதுக்கு உட்பட்ட மேலக்கோட்டையூர், கேளம்பாக்கம், சாத்தங்குப்பம், தையூர், படூர் மற்றும் செம்பாக்கம் ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் 38 வயது நர்ஸ் ஒருவருக்கு உடல் நலம் பாதித்தது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அவருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், அங்கு பணியாற்றும் சக நர்சுகள், டாக்டர்கள், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் கடும் பீதியில் உள்ளனர்.

மாமல்லபுரம்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், தனது கணவருடன் மாமல்லபுரம், மரகத பூங்கா அருகே வாடகை வீடு எடுத்து தங்கி கூலி வேலை வருகிறார். தற்போது அவர், கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் இளம்பெண், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவரை, மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : Closure ,DSP Office ,Kanchi ,Corona , Special SI, Corona, Kanchi DSP Office, Closure
× RELATED காஞ்சியில் விறுவிறு வாக்குப்பதிவு:...