×

ஜப்பான் விஞ்ஞானி மியோவாக்கி முறையில் ஒரே ஆண்டில் 400 மரம் வளர்த்து கருங்குழி பேரூராட்சி சாதனை

மதுராந்தகம்: காடுகள் அழிப்பின் காரணமாக, தற்போது நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற, மீண்டும் மரங்களை வேகமாக வளர்ப்பதாலும், காடுகளை உருவாக்குவதாலும் மழையை அதிகரிக்க முடியும், இயற்கையை பாதுகாக்க முடியும் என ஜப்பானிய தாவரவியல் பேராசிரியர் அகிரா மியோவாக்கி கண்டறிந்தார். மேலும், அதனை செயல்படுத்தியும் காட்டினார். அதில், நாம் மரங்களை நடும்போது சில மீட்டர் இடைவெளி விட்டு நடுவோம். ஆனால், மியோ வாக்கி முறையில் நடும்போது, இந்த மரக்கன்றுகள் ஒவ்வொன்றும் தங்களுக்கு சூரிய ஒளி கிடைப்பதற்காக, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுவான்நோக்கி வேகமாக வளரும்.

வழக்கமாக மரக்கன்றுகள் வளருவதற்கு, 10 ஆண்டுகள் ஆகும். அதனை, மியோவாக்கி முறையில் நெருக்கமாக நடும்போது 2 ஆண்டுகளில் குறிப்பிட்ட உயரத்தை இந்த மரக்கன்றுகள் அடையும். இந்த மரம் வளர்ப்பு முறைக்கு சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு அந்தப் பேராசிரியரின் பெயரையே சூட்டி அவருக்கு விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது. இதுபோன்ற முறையில் தமிழகத்தின் ஒரு பகுதியாக கருங்குழி பேரூராட்சியில், சிறுசிறு காடுகள் ஏற்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கருங்குழி பேரூராட்சியில் மருத்துவமனை வளாகத்தில் பூவரசு, சவுக்கு, தேக்கு, வெண்தேக்கு உள்பட 400 மரக்கன்றுகளை நெருக்கமான முறையில் நட்டு வைத்தனர்.

சுமார் 10 மாதங்களே ஆன நிலையில், தற்போது அந்த மரங்கள், கிடுகிடுவென உயர்ந்து வளர்ந்து காண்போரை அதிசயிக்க வைத்துள்ளது. கருங்குழி பேரூராட்சியில் செயல்படும் கழிவுநீர் கசடுகள் அகற்றும் மேம்பாட்டு நிலையம் அமைந்துள்ள பகுதியிலும் இதே முறையில் 400 மரக்கன்றுகளை நட்டு, அதிவேகமாக வளர்ந்துள்ளது. தற்போது பேரூராட்சி முழுவதும் 8 இடங்களில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Miyawaki ,Japanese ,Black Hole , Japanese Scientist, Miyawaki, 400 Tree, Black Hole, Adventure
× RELATED ஜப்பானிய இயக்குனரின் கடைசி படம் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது