×

செங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 வினியோகம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 நேற்று முதல் அவர்களின்  வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது என கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக தலா 1000 வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் தொற்று காரணமாக வெளியே  வரவேண்டாம். வீட்டிலேயே இருக்க வேண்டும். அனைவருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள்  நேரில் வந்து 1000 வழங்குவார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலினை வழங்கியும், அசல் அடையாள அட்டையை காட்டியும் வீடுகளுக்கு வரும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து 1000 பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அலுவலர் க.சுப்பிரமணி, 9445497075 மற்றும் 8778601525 என்ற  எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். என கூறப்பட்டுள்ளது.

Tags : Persons ,Sengai District Sengai District , Distribution , 1000 , Disabled Persons , Sengai District
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது