×

5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டேன்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சென்னையில் கொ ரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: ராயபுரம் மண்டலத்தில் 3,873 இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 56,595 நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டு 6,814 பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருப்பது கண்டறியப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 மண்டலத்தில் உள்ள குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இதுவரை 2 லட்சம் பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டார்.

அதன்பிறகு சில செய்தி வந்தது. நோய் தொற்று இருக்கிறதா, இல்லையா என்று. அவர் அருகில் நான் இருந்தேன். எனவே முன்னுதாரணமாக என்னை நானே 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டேன். என் மகனும் அமைச்சருடன் ஆய்வுக் கூட்டத்துக்கு போனார். அதனால் நாங்கள் இருவரும் சோதனை செய்தோம். இருவருக்கும் நெகட்டிவ் என்று வந்துவிட்டது. கொரோனாவுக்கு அஞ்சும் ஆள் அல்ல நான்.
 இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 


Tags : Minister Jayakumar , Loneliness, Minister Jayakumar
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...