×

கொரோனா பிடியில் மகாராஷ்டிரா மாநிலம்.: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5024 பேருக்கு கொரோனா

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க மத்திய அரசு துரிதமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 446 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை 77 லட்சத்து 76 ஆயிரத்து 228 என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 58.24 சதவீதமாக உயர்ந்துள்ளனர் . இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,940 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து தற்போது வரை 2,85,636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,52,765-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 175 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 7,106 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : State ,Maharashtra ,Corona , State ,Maharashtra, grip ,Corona
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...