×

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனி திருமஞ்சன திருவிழா நடத்துவதற்காக தீட்சிதர்கள் 150 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 150 பேரில் 2 தீட்சிதர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொரோனா பரவல் காரணமாக பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், கொடியேற்ற நிகழ்வின் போது, 50 தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.வரும் 27ம் தேதி தேர் திருவிழா, 28ம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ளது. விழாக்களை கோவிலுக்குள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான ஆலோசனை கூட்டம், சிதம்பரம் துணை ஆட்சியர் தலைமையில் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர் மற்றும் தரிசன விழாவில் 150 தீட்சிதர்கள் மட்டுமே பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது. பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரு நாட்கள் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ள தீட்சிதர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று கோவில் வளாகத்தில் 150 தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. 150 பேரில் 2 தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : coroners ,Chidambaram Nadarajar Temple , Chidambaram ,Nadarajar,Two coroners ,confirmed,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்...