×

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளுக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.: கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கருத்து

சென்னை : சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளான தந்தை மகனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், மொபைல்ஃபோன் கடை நடத்திவந்த தந்தை, மகன் இருவரும் போலீஸ் காவலில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தென்மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் டுவிட்டரில் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் தற்போது பிரபலமாக உள்ளது. இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Shikhar Dhawan ,detainees , brutality , detainees, devil, cricketer ,Shikhar Dhawan
× RELATED மனைவியுடன் விவாகரத்து பெற்றதால் மகனை...