×

அசாம் எல்லையிலுள்ள பாசன கால்வாயில் நீர் திறந்து விடுவதை நிறுத்தியது பூடான்: விவசாயிகள் பாதிப்பு!!!

அசாம்: அசாம் எல்லையில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பாசன கால்வாயில் நீர் திறந்து விடுவதை பூடான் நிறுத்தியுள்ளது. அண்டை நாடான நேபாளத்தைத் தொடர்ந்து பூட்டானும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பூடானில் இருந்து செயற்கையாக கட்டப்பட்ட அக்கால்வாய் மூலம் கிடைக்கும் நீரை, கொண்டு பாஸ்கா மாவட்டத்தில் கடந்த 1953ம் ஆண்டு முதல் சுமார் 25 கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரம் பேர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பாசன கால்வாயில் நீர் திறந்து விடுவதை பூடான் நிறுத்தி கொண்டுள்ளது.

அண்மையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பூடான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்த போது அந்த பாசன கால்வாயை பயன்படுத்தும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதை பூடான் நிறுத்தியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே இந்தியாவுக்கான பாசன நீரை நிறுத்தவில்லை என பூடான் விளக்கம் தந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாசன கால்வாய்களை பராமரிக்கும் பணி நடைபெற்று வருவதால் தான் நீர் திறந்துவிடப்படவில்லை என்றும் பூடான் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய பகுதிக்கான நீரை ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என பூடான் தெரிவித்துள்ளது.

Tags : opening ,Assam ,Bhutan ,irrigation canal ,border , Assam, Irrigation Canal, Bhutan, Farmers
× RELATED ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக...