கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாயிட்கள் : டி.இமான் ட்வீட்

சென்னை : கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாயிட்கள் என்று இசையமைப்பாளர் டி.இமான் ட்வீட் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கூடுதல் நேரம் கடை திறந்திறந்திருந்ததாக  கைது செய்யப்பட்ட தந்தையும், மகனும் சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பதிவிட்டடுள்ள இசையமைப்பாளர் டி.இமான், “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்  மீது நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற தாக்குதல்களை கேட்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது. இந்த இரக்கமற்ற நடைமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இந்தியாவின் ஜார்ஜ் ஃபிளாய்ட் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>