×

பிரதமரின் அறிக்கையின்படி சீன ஊடுருவல் இல்லை என்றால், கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தது எப்படி? : சோனியா காந்தி கேள்வி

புதுடெல்லி : பிரதமரின் அறிக்கையின்படி, சீன ஊடுருவல் இல்லை என்றால், கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தது எப்படி? காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 15, 16ம் தேதியில் இந்திய, சீன படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், லடாக்கில் தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் SpeakUpForOurJawans என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லடாக்கில் இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்து உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சோனியா காந்தி, அந்த நிலப்பகுதியை மத்தியில் ஆளும் மோடி அரசு எப்படி மீட்க போகிறது? பிரதமரின் அறிக்கையின்படி, சீன ஊடுருவல் இல்லை என்றால், கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தது எப்படி? என கேள்விகலை எழுப்பியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி ஊடுருவல் நடைபெறவில்லை என தெரிவித்து வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சரும், வெளியுறவு அமைச்சரும் திரும்பத் திரும்ப சீன ஊடுருவல் குறித்து பேசுவதாக குறிப்பிட்டுள்ளார். சீன ஊடுருவல் நடந்திருப்பதை இந்திய ராணுவ ஜெனரல்களும், பாதுகாப்பு நிபுணர்களும் உறுதி செய்திருப்பதாக தெரிவித்துள்ள சோனியா, கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை தடுக்க முயல்கையிலேயே 20 வீரர்களும் பலியாகி உள்ளதாக கூறியுள்ளார். அவர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டு உள்ளதாகவும், நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு தங்களது உயிரை அபாயத்தில் வைத்து நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள்தான் காரணமெனவும் சோனியா கூறியுள்ளார்.

Tags : soldiers ,Chinese ,Calvanon Valley ,Indian ,Sonia Gandhi ,Occupied Territory , ladakh,China,Territory,,Soldiers,Martyred,Sonia Gandhi
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை