சாத்தான்குளம் சம்பவம் பயங்கரமானது; இது உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாத மனிதாபிமானமற்ற செயல் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தூத்துக்குடி : சாத்தான்குளம் சம்பவம் பயங்கரமானது; இது உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாத மனிதாபிமானமற்ற செயல் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர்களுடைய நீதி தாமதமானால் அது அநீதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி அவர்களை கைது செய்த சாத்தான்குளம் போலீசார், காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் மரணம் அடைந்ததாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>