×

திருச்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்.: முக்கொம்பில் புதிய கதவணை கட்டும்பணிகளையும் ஆய்வு

திருச்சி : திருச்சியில் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். திருச்சி மாவட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்டந்தோறும் ஆலோசனை நடத்தி வரும் தமிழக முதல்வர் இன்று திருச்சியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் பற்றி ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதற்காக சேலத்திலிருந்து திருச்சிக்கு வந்த முதல்வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். இதன் அடுத்து பள்ளிக் கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை, வணிகவரித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவற்றுக்காக கட்டப்பட்டுள்ள ரூ.25.53 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அதனையடுத்து முக்கொம்பில் நடைபெறும் புதிய கதவணை கட்டும் பணிகளை ஆய்வு செய்த பின்னர், தற்போதைய நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Trichy ,CM , CM ,various ,development, Trichy.
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...