கொரோனாவை பொருட்படுத்தாமல் ஹாங்காங்கில் ”டுவான்வூ திருவிழா”: மக்கள் கோலாகல கொண்டாட்டம்!!!

ஹாங்காங்:  சீனாவின் பல்வேறு பகுதிகளில் டுவான்வூ திருவிழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் கொண்டாடப்படும் ”டுவான்வூ திருவிழா” இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹாங்காங்கில் உணவகங்களில் குவிந்த மக்கள் இந்த பண்டிகையின் சிறப்பு உணவான தொங்க்ஷி என்றழைக்கப்டும் பாரம்பரியமான மூங்கில் இலைகளில் வைத்து வேகவைக்கப்பட்ட அரிசி மற்றும் இறைச்சி கலவையை குடும்பத்தினருடன் குதூகலமாக உண்டு களித்தனர். மேலும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் மக்கள் ஆனந்தமாய் கண்டுகளித்தனர். இதனைத்தொடர்ந்து, ஸ்டாண்லி கடற்கரையில் மேளதாளங்களுடன் டிராகன் படகுப் போட்டிகள் நடத்தப்பட்டன.  

இந்த படகு போட்டியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தொடர்ந்து, படகு அணிவகுப்பில் 12 அணி வீரர்கள் கலந்து கொண்டு கரவொலி எழுப்பியவாறே உற்சாகமாக  துடுப்பு போட்டு சென்றனர்.  சீனாவில்தான் கொரோனா தொற்று முதன்முதலில் பரவி உலகைகே ஆட்டிப்படைத்தது. இதனால் உலக நாடுகளே பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். தற்போது, கொரோனா காலத்திலும் கொண்டாட்டம் கலைக்கட்டியதால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு எழமுடியும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>