சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளுக்கு நடந்த கொடூரத்திற்கு எதிராகக் குரல் எழுப்புங்கள் : கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் !

சென்னை : சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளான தந்தை மகனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும், எனத் தெரிவித்து #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

Related Stories:

>