இந்தியாவின் எல்லை பகுதிகளில் பணியாற்றும் நெடுஞ்சாலைப் பணியாளர்களுக்கு 170% ஊதிய உயர்வு!!!

இந்தியாவின் எல்லைகளில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சுமார் 170 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டிய இந்திய பகுதிகளில்  நெடுஞ்சாலை திட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஜூன் 1 முதல் இடற்பாட்டுபடியை 100 விழுக்காட்டிலிருந்து  170 விழுக்காடு வரை உயர்த்தி தேசிய நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிற்நுட்ப பணியாளர் அல்லாத டேட்டா என்ட்ரி ஆப்பிரேட்டர்களுக்கு ஊதியம் 16 ஆயிரத்து 770 ரூபாயிலிருந்து 41 ஆயிரத்து 440ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேலைக்கு நாட்டின் மற்ற இடங்களில் பணியாற்றுவோருக்கு 28 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதேபோல் எல்லை பகுதியில் நெடுஞ்சாலை திட்டங்களில் ஒப்பந்தங்கள் முறையில் பணியாற்றுவோருக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடும், 10 லட்சம், ரூபாய் விபத்து காப்பீடும் அளிக்கப்படுகின்றன. மேலும் கல்வான் பள்ளதாக்கு பதற்றத்திற்கு பிறகு சீன-இந்திய எல்லைப் பகுதிகளில் தொடர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், எல்லை பகுதிகளில் பணிபுரியும் மக்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 100 முதல் 170 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories:

>