×

இந்தியா-சீன எல்லை பிரச்சனை...மத்திய அரசு மர்மமான முறையில் கையாளுகிறது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சென்னை : இந்தியா-சீன எல்லை பிரச்சனையை மத்திய அரசு மர்மமான முறையில் கையாள்வதாக முன்னாள் காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் புகார் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது சீனா. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, சீனாவின் அத்துமீறல்களை கண்டித்து வருகிறது.

அண்மையில் அத்துமீறி கூடாரம் அமைத்த சீன ராணுவ வீரர்களுடன் இந்திய வீரர்கள் சண்டை போட்டனர். இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிகையை வெளியிட சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் தங்களுது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில் இன்று முன்னாள் காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர் இந்தியா- சீன எல்லை பிரச்சனையை மத்திய அரசு மர்மமான முறையில் கையாண்டு வருகிறது. மேலும் ராகுல் காந்தியின் எந்த கேள்விக்கும் ராணுவ அமைச்சரோ, பிரதமர் மோடியோ பதில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : government ,Indo-China ,India , India-China, border,Central government,handled
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...