×

தூத்துக்குடியில் பெட்ரோ கெமிக்கல் பூங்கா அமைக்க அனுமதி மறுப்பு: விசாகப்பட்டினம் விபத்தை சுட்டிக்காட்டி கோரிக்கை நிராகரிப்பு..!!

டெல்லி: தூத்துக்குடியில் தொழிற்பூங்கா அமைக்க சிப்காட் அளித்த விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை மீண்டும் நிராகரித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே 631 ஹெக்டர் பரப்பளவில் 310 கோடி ரூபாய் செலவில் தொழிற்பூங்கா ஒன்றை அமைக்க சிப்காட் நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பம் செய்திருந்தது. இந்த தொழிற்பூங்காவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோலிய கெமிக்கல் ஆலைகள் உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் திட்ட அமைவிடத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோலிய கெமிக்கல் ஆலைகள் கொண்டு வருவது 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட உயிர்கோளத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கு அனுமதி தர மத்திய சுற்றுச்சூழல் துறை மறுத்துவிட்டது.

இந்த திட்ட அமைவிடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் பொதுமக்கள் பலர் வசிப்பதால் தொழிற்பூங்கா அமைக்க முடிவெடுத்தது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விஷவாயு விபத்தை சுட்டிக்காட்டியிருக்கும் மத்திய அரசு, திட்ட அமைவிடம் தேர்வு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளை பின்பற்றி தேர்வு செய்யப்படவில்லை என தெரிவித்து தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

Tags : Petrochemical Park ,Thoothukudi Refuse ,accident ,Visakhapatnam , Thoothukudi, Petrochemical Park, Visakhapatnam
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!