×

சேலத்தில் மாவட்டத்தில் ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா : சுகாதாரத்துறை தகவல்

சேலம்: சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 101 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 352-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெட்டிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 569 இருந்தது. இந்நிலையில் இன்று மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 101 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சேலம் மாவட்ட மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.Tags : Salem District: Health Department ,Corona ,Salem District , Corona ,101,Salem, District, Health Department,
× RELATED சென்னையில் 1,02,985 பேர் கொரோனாவால் பாதிப்பு