×

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம்: WHO எச்சரிக்கை

சுவீடன்: ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் கிளர்ந்தெழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம்  தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளில் வைரஸ் தொற்று ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவு இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி லூக் கவலை தெரிவித்துள்ளார்.

இவற்றில் 11 நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் ஐரோப்பாவில் வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என  தெரிவித்துள்ளார். இந்த 11 நாடுகள் பட்டியலில் சுவீடன், அர்மீனியா, அசர்பைஜான், கசாகிஸ்தான், அல்பானியா, போஸ்னியா, உக்ரேன் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் துவங்கிய பின், முதன் முதலாக நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 39 ஆயிரத்து 818 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 36 ஆயிரத்து 426 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் இதுவரை 20 லட்சத்து 58 ஆயிரத்து 853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 லட்சத்து 65 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 1,26,644 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.



Tags : European ,countries ,WHO ,Corona , Corona, European Countries
× RELATED சில்லிபாயின்ட்..