×

அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவ கற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தேனீ, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனீ, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடிக்கபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கரையூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதிகளில் தல 11 செ.மீ. மழையும், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி மற்றும் மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதிகளில் தலா 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்குளுக்கான எச்சரிக்கை

ஜூன் 26ம் தேதியன்று தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 26 மற்றும் 27 தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடக மற்றும் லட்சத்தீவு பகுதிகளில்  சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 27 முதல் 29ம் தேதி வரை வடக்கு அரபிக்கடல், குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Thundershowers ,Western Ghats , Thundershowers,Western Ghats,Chennai Weather Center
× RELATED வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி...