×

கொலக்கொம்பையில் 9 போலீசாருக்கு கொரோனா? காவல் நிலையம் மூடப்பட்டது

குன்னூர்:கொலக்கொம்பை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 9 போலீசாருக்கு கொரோனா உள்ளதற்கான அறிகுறிகள் உள்ள நிலையில் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அதேபோல குன்னூர் தாசில்தார் அலுவலக ஊழியருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அந்த அலுவலகமும் மூடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொேரானா பாதிப்பு தற்போது தீவிரமடைய துவங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆக இருந்தது. 31 பேர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

குன்னூர் கொலக்கொம்பைஅருகே உள்ள தைமலை மற்றும் தூதூர்மட்டம்   பகுதியில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் அவர்களும் கோவை இ.எஸ்.ஐ.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அந்த  பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.  கொலக்கொம்பைகாவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்  கொலக்கொம்பை காவல் நிலையத்தில் பணிபுரியும் 9 போலீசாருக்கு  கொரோனா  அறிகுறிகள் தென்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் பரிசோதனைக்காக  ஊட்டி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காவல் நிலையம் பூட்டி சீல்  வைக்கப்பட்டு கிருமி நாசினி மற்றும் மருந்துகள் தெளிக்கும் பணி நடைபெற்றது. காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை  மேற்கொண்டு வருகின்றனர். கொலக்கொம்பை காவல் துறையினர்  தினந்தோறும்  சேலாஸ் பகுதியில் வாகனங்களை நிறுத்தி  அபராதம் விதித்து வந்துள்ளனர்.  தற்போது 9 போலீசாருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளதால் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதேபோல குன்னூர் தாலுகா அலுவலக ஊழியருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் அந்த பகுதி
மக்களும் பீதியில் உள்ளனர். குன்னூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு நேற்று கொரோனா அறிகுறிகள் தென்பட்டது.

இதனால் அவர்  பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக தாசில்தார் அலுவலம்  மூடப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வந்து சென்ற பொதுமக்கள், சக  அலுவலர்கள் அச்சத்தில் உள்ளனர்.

போலீஸ் கேன்டீன் மூடல்
ஊட்டியில் உள்ள போலீ்ஸ் கேன்டீனுக்கு சென்னையில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து போலீஸ் கேன்டீன் மூடப்பட்டது. அங்கு பணியாற்றி வந்த காவலர்கள் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

நீலகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் நேற்று (நேற்று முன்தினம்) 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (நேற்று) மேலும் 34, 35 வயது பெண்கள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் குன்னூர் நகராட்சி மாடல் அவுஸ் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் கோவை மருத்துவமனை சிகிச்சைக்கு சென்று வந்தவரின் 2ம் நிலை தொடர்புடையவர். இன்னொருவர் கோவை பீளமேடு, சவுரிமேடு, ஹட்கோ பகுதியை சேர்ந்த 34 வயது பெண் கோவையை நிரந்தர முகவரியாக கொண்டு வசித்து வருபவர். நீலகிரி வந்தபோது பரிசோதனை மேற்கொண்டதில் இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Tags : policemen ,Colombo ,Corona ,police station , Kolokombai, Corona, Police Station
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு