×

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீண்: கடலோர கிராமமக்கள் அவதி

சீர்காழி: கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதனால் கடலோர கிராமமக்கள் அவதிப்படுகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழியை சுற்றியுள்ள கடலோர கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கபட்டு வருகிறது தற்போது நிலவும் கடும் வறட்சியால் போதிய தண்ணீர் இல்லாமல் கடலோர கிராமமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக அருகில் உள்ள வாய்க்காலில் செல்கிறது.

இதனை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பயனற்று வாய்க்காலில் செல்லும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் அதிகம் விரையமாவதால் கடலோர கிராமங்களுக்கு போதிய குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வாய்க்காலில் செல்வதும், விவசாயம் செய்யப்படுவதும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே நாராயணபுரத்தில் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டுமென கடலோர பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : collapse Thousands , Loot, joint drinking water, liter water, coastal villages
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...