×

மூணாறில் கடையை சூறையாடிய காட்டுயானை

மூணாறு: மூணாறில் கடைகள், டூவீலர்களை காட்டுயானை சேதப்படுத்தியதால் வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் பீதியடைந்துள்ளனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சொக்கநாடு பகுதியில் கணேசன் என்ற கொம்பன் யானை வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டூவீலர்களை தள்ளிவிட்டு சேதப்படுத்தியது. பின்னர், எஸ்டேட் பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தை இடித்து நொறுக்கியது. இந்நிலையில், மூணாறு அருகே சின்குகண்டம் பகுதியில் முறிவாளன் என்ற கொம்பன் யானை நேற்று மாலை ஷாஜி என்பவரின் கடையை சூறையாடியது.

மூணாறு மற்றும் சுற்றுவட்டாரத்தில் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். இவைகளை கட்டுப்படுத்த வனத்துறை அதிகரிகளுக்கு, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலை, தொடர்ந்தால் பொதுமக்கள், தொழிலாளர்கள் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Tags : shop ,Munnar , Munar, wild elephant
× RELATED நீலகிரியில் ஆய்வு செய்து விட்டு...