×

கொரோனா தடுப்பு நடவடிக்கை: புதுச்சேரி - கடலூர் எல்லையில் கொரோனா தடுப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி ஆய்வு!!!

கடலூர்: கடலூர் மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி புதுச்சேரி-கடலூர் மாவட்ட எல்லையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடலூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் இதுவரை 916 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனடிப்படையில், சிறப்பு அதிகாரியாக ககன்தீப்சிங் பேடியை கடலூர் மாவட்டத்திற்கு நியமித்துள்ளனர். அவர் இன்று கடலூர்-புதுச்சேரி சாலையில் உள்ள கங்கனாங்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.அபினோ ஆகியோரும் கொரோனா தடுப்பு ஆய்வு பணியில் ஈடுப்பட்டனர்.  வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வருபவர்களின் தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் கூறியதாவது, கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் கொரோனாவை அழிக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஏதேனும் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால் உடனடியாக அவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என ககன்தீப்சிங் தெரிவித்துள்ளார்.  அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக தீவிர சிகிச்சையளிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

மேலும், அவர் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் அதிகாரிகளிடம் அனைத்து மக்களுக்கும் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் தட்டுபாடில்லாமல் தேவையான அளவு வழங்கப்படுகிறதா?  எனவும், அந்த காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றனரா? எனவும் பல்வேறு விதமான கேள்விகளையும், அதற்காக பதில்களையும் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : border ,Cuddalore ,Puducherry ,Puducherry - Cuddalore , Coronation Prevention: Gokanteep Singh Bedi Study at Puducherry - Cuddalore
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது