×

கொரோனாவை தடுப்பத்தில் சிறந்த மாநிலம் தமிழகம்; திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரை..!!

திருச்சி: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சியின் மூலம் ரூ.25.53 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அரசு சட்டக்கல்லூரியில் ரூ.311.11  லட்சத்தில் கட்டப்பட்ட நூலக கட்டடத்தை முதலவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.94.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். ரூ..609 லட்சம் மதிப்பில்  கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு கல்லூரியில் கட்டப்பட்ட பெண்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்தார்.

ரூ.1022.14 லட்சம் மதிப்பில் 6 இடங்களில் புதிய வகுப்பறை, ஆய்வகம் மற்றும் கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார். ரூ.81.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை இயக்குநர் குடும்ப நலத்துறை அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமயபுரம் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடனான  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. கொரோனாவை தடுப்பத்தில் சிறந்த மாநிலம் தமிழகம் என்றார். ஐசிஎம்ஆர் கூறிய வழிமுறைகளை முறையாக கடைபிடித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வல்லரசு நாடுகளே கொரேனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க திணறி வருகின்றன. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய கடன் வசதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 


Tags : Tamil Nadu ,Palanisamy ,speech ,Best State ,office ,Coronation ,Trichy Collector ,Office at Prevent Coronation Palanisamy , Tamil Nadu is the Best State to Prevent Coronation Palanisamy speech at Trichy Collector's office
× RELATED தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்...