×

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு..!வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம்..!!மாலை 5 மணிக்கு அஞ்சலி

சென்னை: சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்று வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது. நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து  உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களை சாத்தான்குளம் காவல்த்துறை அதிகாரிகள் அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருவரின் உயிரிழப்புக்கு காரணமான காவல்த் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு மருந்து வணிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் போராட்டம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக்கடைகள் மூடப்படும் என அறிவித்தது. அதன்படி இன்று காலையில் மருந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இக்கொடுமையை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர், கோட்ட மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் இன்று ஊரடங்கு நடைமுறையில் உள்ள மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தனிநபர் இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து  கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும், வணிக பெருமக்களும் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறோம். அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

Tags : Sathankulam , Sathankulam, father, son, death, merchant association, shoplifting struggle
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...