×

குடிநீர் பைப்லைனை உடைத்து நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: பொதுமக்கள் முற்றுகை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மினி குடிநீர் தொட்டியின் பைப் லைன்களை உடைத்து ஆக்கிரமிக்க முயன்றவர்களை பொது மக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மினி குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதில் தண்ணீர் பிடித்து அப்பகுதி பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் இந்த மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அதே பகுதியை சேர்ந்த சிலர் பள்ளம் தோண்டி குடிநீர் தொட்டி மற்றும் குழாய்களை உடைத்து ஆக்கிரமிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை கண்டதும், அப்பகுதி மக்கள், ஆக்கிரமிப்பாளர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு சென்று, பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு பணியினை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பொது மக்கள், தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவரிடம் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்தனர்.

Tags : land , Trying, drinking water, pipeline,occupy ,land, public blockade
× RELATED நில புரோக்கர் பரிதாப பலி