×

பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 83 பேர் பலி: 30 பேர் காயம்

பாட்னா: பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 83 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி இறந்தனர். மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 15 கால்நடைகளும் இறந்துள்ளன. அதோடு, பல வீடுகள் மின்னல் தாக்கி சேதமடைந்துள்ளது. அதிகபட்சமாக கோபால் கஞ்ச் பகுதியில் 13 பேர் இறந்துள்ளனர்.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பலியானவர்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மழை பெய்யும்போது மின்னல் தாக்கி ஒரு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தளவுக்கு மக்கள் பலியாகி இருப்பது மிகவும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது



Tags : Bihar , 83 people killed, 30 injured , Bihar overnight
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!