×

முன்பதிவுகள் ரத்து, கட்டணம் வாபஸ் ஆகஸ்ட் 12 வரை ரயில்கள் ஓடாது: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில்கள் ஓடாது. ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவுக்கான பணம் திருப்பி கொடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமான ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பேருந்து, ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்புவதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் 22ம் தேதியிட்ட அறிக்கையில் ரயில்வே வர்த்தகப் பிரிவு கூறியிருப்பதாவது:

ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை அட்டவணையிடப்பட்ட அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் அந்த ரயில்களில் செல்ல முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கான டிக்கெட் தொகையை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும். ரயில்வே மண்டலங்கள் மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குபடி கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள் கேமிராவில் கண்காணிப்பு
ரயில்வே வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ‘ரயில்வேயினால் ஏ1, ஏ, பி, சி, டி, இ என வகைப்படுத்தப்பட்டுள்ள 6,049 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது. இதற்காக ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல்லுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கேமிராக்கள் அருகில் உள்ள ஆர்பிஎப் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டு, ரயில் நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் எல்சிடி மானிட்டர் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது. ரயில்டெல் ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 251 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு காமரா பொருத்தி உள்ளது. வரும் செப்டம்பர் 2020க்குள் மேலும் 85 நிலையங்களில் கண்காணிப்பு காமரா பொருத்தும் பணி முடிவடைய உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Trains ,not canceled , August 12
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!