×

இணையதள செஸ்: சாம்பியனை வீழ்த்திய வைஷாலி

சென்னை: பெண்களுக்கான  ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் போட்டி  இணையதளம் மூலமாக நடக்கிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 21 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஒன்றில்  சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலி 6-5 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் அன்டோனெட்டா ஸ்டெபனோவாவை  வீழ்்ததினார். முன்னதாக தகுதி சுற்றுகளில் முன்னணி வீராங்கனைகள்  வாலண்டினா குனினா, அலினா காஷ்லின்ஸ்கயா ஆகியோரை வைஷாலி வீழ்த்தினார்.

ஸ்டெபனோவாவை வீழ்த்தியது குறித்து வைஷாலி, ‘முன்னாள் உலக சாம்பியனுடன் விளையாடி அவரை தோற்கடித்தது மகிழ்ச்சி. போட்டியின் ஒரு கட்டத்தில் 5.5-2.5 புள்ளிகள் என நான் முன்னிலையில் இருந்தேன். ஆனால் இணைய இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் புள்ளி வித்தியாசம் குறைந்துப் போனது’ என்றார். தொடர்ந்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதிப் ேபாட்டியில் மங்கோலியாவின் சர்வதேச மாஸ்டர் முன்க்சுல் துர்முங்குடன் விளையாடினார். முடிவுகள் இன்று தெரியவரும். இறுதிப்போட்டி ஜூலை 20ம் தேதி நடக்கும். இந்தியாவின் முன்னணி செஸ் வீராங்கனையும் உலக ரேபிட் சாம்பியனுமான கொனேரூ ஹம்பி முதல் சுற்றில் 4.5-5.5 என்ற புள்ளி கணக்கில் வியாட்நாம்  வீராங்கனையிடம் தோற்றார்.

Tags : Vaishali , Website Chess, Vaishali, defeated,champion
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ் டொமினிக் தீம்...