×

இந்தியா ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் டெண்டுல்கர்

புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக்கில் சாதிக்க ஒவ்வொரு விளையாட்டுக்கும் சச்சின் ெடண்டுல்கர் போன்றவர்கள் மட்டுமல்ல,  அவரைப் போல் திறமையை வெளிப்படுத்த சரியான தளமும் தேவை என்று இந்திய தடகள சம்மேளனத்தின்  தலைவரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவருமான அடில் சுமரிவாலா தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு ‘ஸ்போர்ட்ஸ் ஃபார் ஆல்’ ஏற்பாடு செய்திருந்த இணையதள உரையாடலில்,  அடில் சுமரிவாலா, பணம் ஒரு நாட்டுக்காக பதக்கங்களை வாங்க உதவலாம், உதவாமல் போகலாம். ஆனால் பதக்கம் கைப்பற்றக் கூடிய  சூழல்தான் நீண்டகாலத் தேவை. அதற்கு கீழ் மட்டத்தில் இருந்து உறுதியான அடிப்படை கட்டமைப்புகள் தான் முக்கிய தேவையாகும்.

மேலும் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல ஒவ்வொரு விளையாட்டுக்கும் சச்சின் தெண்டுல்கர்கள் ேபால் திறமையானவர்கள் தேவை. பல விளையாட்டுகளில் சச்சின் டெண்டுல்கர்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும்  தங்கள் திறமைகளை வெளிப்படுத்த டெண்டுல்கருக்கு கிடைத்தது போன்ற சரியான களம் தேவை. அப்படி களமிருந்தால்தான் ஒவ்வொரு விளையாட்டிலும் ஒலிம்பிக்கில் சாதிக்கலாம்’ என்றார்.

Tags : Olympics Tendulkar ,India ,Olympics , Tendulkar, achieve, India's ,Olympics
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...