×

ஈரானில் சிக்கிய மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: 700 தமிழக மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா பரவல் காரணமாக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக முதல்வர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக பிரத்யேக கப்பல் இன்று புறப்பட உள்ளது. இக்கப்பல் மூலம் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் விரைவில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைவார்கள்.

Tags : Government ,Iran ,fishermen , Government , rescue fishermen, trapped , Iran
× RELATED சூழ்நிலை சரியான பிறகே பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு