×

கொரோனா ஒழிப்பு செலவுக்காக பரிதாபம் ஐய்ய்யா... சாமி...: ஆளுநரிடம் கையேந்தி நிற்கும் டெல்லி அரசு

புதுடெல்லி:  தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் எந்த மாநிலமும் நாளொன்றுக்கு பதிவு செய்ததை விட இது உச்சபட்சமானதாகும். கொரோனா பாதிப்பில் இரு மடங்கு அதிகமான எண்ணிக்கையை கொண்ட மகாராஷ்டிராவில் கூட பாதிப்புகள் என்பது இந்த அளவிற்கு கிடையாது. இதில் தேசிய கொரோனா தொற்று வளர்ச்சி விகிதத்தை விட, டெல்லியின் தொற்று விகிதம் இரு மடங்கிற்கு மேலாக நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. டெல்லியின் மொத்த கொரோனா பாதிப்பு இன்றைய அளவில் மட்டும் 71 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இது அதிகம் தொற்று உள்ள மும்பையை விட கூடுதல் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.  

மும்பை மாநகராட்சியின் பாதிப்பு எண்ணிக்கை 68 ஆயிரத்திற்கு மேலாக இருந்தாலும், அதன் பரவல் விகிதம் மிகவும் மெதுவாக உள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சமீபத்திய நாட்களில் டெல்லியில் கொரோனா மருத்துவ பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டதினால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த சோதனையை மேலும் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டாலும், உறுதி செய்யப்பட்ட பின்னர் நோய் தொற்று உள்ளவர்களை எங்கு தங்க வைத்து அவர்களுக்கு தேவையானை மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது கேள்வியாக உள்ளது. ஏனெனில் அதற்கான போதிய இடவசதி இல்லை. அதனை தற்போதுதான் மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மத்திய அரசு ரயில் பெட்டி வசதிகளை செய்து கொடுத்து இருந்தாலும், அதனையும் தாண்டி பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது,

நிதி பிரச்னை?
கொரோனா நோய் தொற்று விவகாரத்தில் மத்திய அரசு, டெல்லி அரசுக்கென அதிகளவில் வசதிகள் செய்து கொடுத்து இருந்தாலும், மாநில அரசு தரப்பில் தன்னிச்சையாக எந்த முடிவுகளையும் மேற்கொள்ள முடியவில்லை. ஆளுநரிடம் அதிகாரம் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதனால் தான் நோய் தொற்று உள்ளவர்கள் யார் என்பது குறித்து பரிசோதனையை அதிகரிப்பது, அவர்களுக்கு மருத்துவ வசதிகளுடன் தனிப்பட்ட வார்டுகள் கொண்ட இடங்களை ஏற்படுத்துவது போன்ற விவகாரத்தில் டெல்லி அரசுக்கு அதிகபட்சமாக நிதி ஆதாரம் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு விஷயத்திலும்  நிதிக்காக   ஆளுநரின் ஒப்புதலை எதிர்பார்க்க வேண்டிய நிலையில்  டெல்லி  முதல்வர் கெஜ்ரிவாலின் அரசு  உள்ளது.

புளிச்… புளிச் எல்லாம் நஹி
வட மாநிலங்களை பொருத்தமட்டில் பான்பராக் போன்ற குட்காவை அதிகம் பயன்படுத்துவார்கள். மேலும் அதனை எச்சிலாக துப்பும் போது கூட சுகாதாரம் என்பது கேள்விக்குறிதான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாலை, குடியிருப்பு பகுதி என்று அவர்கள் கண்டு கொண்டது கிடையாது. ஆனால் கொரோனா நோய் தொற்று பாதிப்பிற்கு பிறகு அது முற்றிலும் மறைந்துவிட்டது. பொது இடங்களில் எச்சில் போன்ற அசுத்தம் செய்வதை மாநில மக்கள் முழுமையாக தவிர்த்து விட்டார்கள்.

Tags : Sami ...: Govt ,governor ,Govt ,New Delhi , Coroner's eradication, for the cost, awful Iyaya, Sami ...
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...