×

மகாராஷ்டிராவில் 54 போலீசார் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு இதுவரை 54 போலீசார் உயிரிழந்துள்ளனர். தென் மும்பையில் உள்ள மரைன் டிரைவ் போலீஸ் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாண்டூரங் ஆனந்தா பவார் என்ற அதிகாரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தேரி மரோலில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். கடந்த 24 மணிநேரத்தில், மகாராஷ்டிராவில் மேலும் இரண்டு போலீசார் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் மூன்று உயரதிகாரிகளும் அடங்குவர். இதுவரை உயிரிழந்த போலீசாரில் 34 பேர் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் நேற்று வரை மொத்தம் 4,200 போலீசாருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 3,000க்கும் மேற்பட்ட போலீசார் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 991 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 போலீசார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Tags : policemen ,Maharashtra , 54 policemen ,killed , Maharashtra
× RELATED சோழவரம் காவல் நிலையத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!!