பிளஸ்1 பாட திட்டத்தை மாற்றும் அறிவிப்பை அரசு கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: 11ம் வகுப்பு பாடத் திட்டங்களை மாற்றும் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்புக் கல்வி ஆண்டில் 11ம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான பாடப் பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. பாடத் திட்டங்களில் தமிழக அரசு அறிவித்துள்ளவற்றை பார்த்தால், தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெரும் வாய்ப்புகளையே தட்டிப் பறிக்கும் கொடும் செயலாகவே தெரிகிறது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்காத மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயில விரும்பினால், மாற்றப்பட்ட பாடப் பிரிவுகளின் கீழ் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் பொறியியல் படிப்புகளில் சேர முடியாது. எனவே தமிழக அரசு 11ம் வகுப்பு பாடத் திட்டங்களை மாற்றும் அறிவிப்பைக் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>