×

அக்டோபர் வரை பாக். மீதான தடை தொடரும்: சர்வதேச நிதி தடுப்பு அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது என்பது குறித்து தீவிரவாதத்துக்கு எதிரான சர்வதேச நிதிதடுப்பு அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும். இதன் அடிப்படையில் உலகில் உள்ள நாடுகள் பட்டியலிடப்படும். தீவிரவாதிகளுக்கு அடைக்காலம் அளிக்கும் நாடுகள் கருப்பு பட்டியலில் சேர்ப்பது வழக்கமாகும். பாகிஸ்தான் தற்போது, இந்த அமைப்பின் சாம்பல் நிற பட்டியலில் இருந்து வந்தது. இந்த அமைப்பு விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறினால், அடுத்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும்.

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்காரவாத குழுக்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது உட்பட 27 நிபந்தனைகளை பாகிஸ்தானுக்கு இந்த அமைப்பு விதித்துள்ளது. இதில், 14 ஐ மட்டுமே அது பூர்த்தி செய்துள்ளது.  
இதனால், பாகிஸ்தான் முடிக்க மற்ற 13 நிபந்தனைகளின் நிலை குறித்து இந்த அமைப்பு ஆய்வு செய்ய இருந்தது. கொரோனா காரணமாக அந்நாடு முடங்கியுள்ளதால்,  வரும்  அக்டோபரில் நடைபெறும் தனது கூட்டத்தில் இது பற்றி முடிவு எடுக்க உள்ளது.  அதுவரை பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் வைத்து கண்காணிக்க, இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

Tags : Pak ,International Monetary Fund , Pak until October, Prohibition , continue, International Monetary, Fund announcement
× RELATED பாக்.கில் சரப்ஜித் சிங் கொலையில் தொடர்புடைய குற்றவாளி கொலை