×

செங்கோட்டை அருகே ஆரியங்காவில் ஓநாய் தொல்லை அதிகரிப்பு

செங்கோட்டை: செங்கோட்டை அருகே ஆரியங்காவு பகுதியில் ஓநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. செங்கோட்டை அருகே தமிழக, கேரள எல்லை பகுதியான தென்மலை, ஆரியங்காவு பகுதிகளில் ஓநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்மலை அனாமா பவனை ேசர்ந்த அனிஸ் என்பவர் தென்மாலா சந்தி அருகேயுள்ள தனது கடையில் நேற்று காலை தூங்கிக்கொ
ண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஓநாய், அவரது காலை கடித்தது. இதையடுத்து தப்பிச்சென்ற அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோட்டாரக்கார தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதேபோல் மேலும் சிலரை கடித்து காயப்படுத்தியது. மேலும் தென்மலையைச் சேர்ந்த சஜி என்பவரது ஆட்டுத் தொழுவத்தில் புகுந்து ஓநாய் ஆடுகளை கடித்தது. இதனால் ஆடுகள் அலறுவதைக் கேட்டு அங்கு சென்ற சஜி, ஓநாயை விரட்டினார். இந்நிலையில் நேற்று நண்பகல் தென்மலை டிப்போ பகுதிக்கு சென்ற ஓநாயை பிடிக்க அதன் அருகிலும், ரியல் எஸ்டேட் பகுதியிலும் இரும்பு கூண்டு வைத்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் எரியப்பாவ் மற்றும் தென்மாலா டிப்போ அருகே புகுந்த இரு ஓநாய்கள் அங்குள்ள மக்களை தாக்கியது. மேலும் தென்மாலா ரியல் எஸ்டேட் தொழிலாளர்களையும் விரட்டிச் சென்றது.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஓநாய் தொல்லையால் அவதிப்படும் மக்கள், இதற்கு நிரந்தரத்தீர்வு காண கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே கடந்த வாரம் எடப்பாளையம் பகுதியில் ஒருவரது காலை கடித்த ஓநாயை ஆரியங்காவு வனத்துறையின் கூண்டு வைத்து பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Aryanka ,Sengottai Red Fort , Red Fort, Wolf Trouble, Increase
× RELATED கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர்...