×

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா தடுக்க பஸ் போக்குவரத்தில் மாற்றம்: பக்கத்து மாவட்டங்களுக்கு செல்ல தடை

நெல்லை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள் மாவட்ட அளவில் மட்டும் இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளி மாவட்டங்களுக்கு  சொந்த வாகனங்களில்  செல்பர்களுக்கு இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஜூன் 1ம்தேதி முதல் 50 சதவீத பயணிகள் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மண்டல அளவில் பஸ் போக்குவரத்து நடைபெற்று வந்தன. சமூக இடைவெளியுடன் பயணிகள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சில வழித்தடங்களில் பயணிகள் நின்றபடி பயணிக்கும் அளவுக்கு கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் சென்னை போன்ற பிற மாவட்டங்களிலும் கொரோனா அதி வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இன்று (ஜூன்25) முதல்  பஸ் போக்குவரத்தில் மீண்டும்  கட்டுப்பாடு ெகாண்டுவரப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்தில் மண்டல அளவில் அனுமதிப்பது வரும் 30ம்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக மாவட்ட அளவில் மட்டும் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் இ-பாஸ் இன்றி அருகில்  சொந்த வாகனங்களில் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு ெசல்வோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய தென் மண்டலங்களில் இந்த புதிய நடைமுறை அமலில் வந்துள்ளதால் இந்த விபரம் தெரியாமல் இன்று காலை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதேநேரத்தில் அருகில் உள்ள மாவட்டங்களில் பணி செய்பவர்களுக்கு ஏற்கனவே இருந்ததுபோல்  குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறைந்த அளவிலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதிலும் அரசு ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்த பின்னரே  பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இ- பாஸ் இல்லாமல் சொந்த வாகனங்களில் செல்ல முயன்றவர்கள் சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் எச்சரிக்கைப் பட்டனர். இவ்வாறு இ-பாஸ் இல்லாமலோ அல்லது போலி இ-பாஸ் மூலம் வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தர விடப்பட்டு உள்ளது.

Tags : tenkasi ,Thoothukudi Paddy ,Thoothukudi , Paddy, Tenkasi, Thoothukudi, Corona, Bus Transport, Transfer
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...