×

எங்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து விடுங்கள்.:மும்பை மாணவிகள் தமிழக முதல்வருக்கு உருக்கமான கடிதம்

மும்பை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதேபோல மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தபடி, தமிழக பாடத்திட்டத்தின் படி 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று ‘மும்பை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த மாணவிகள் சிலர் தமிழக முதல்வருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். மும்பை தாராவி உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் அனிதா என்ற மாணவி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பின்வருமாறு காண்போம் : ’’தமிழக முதல்வருக்கு வணக்கம். ஐயா, தமிழ்நாட்டில் அறிவித்ததைப் போலவே மும்பையில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்களாகிய எங்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். மும்பையில் அடுத்த மாதம் 11-ம் வகுப்பு தொடங்க இருக்கிறது. எங்களுக்கு இதுவரையில் தமிழக அரசு 10-ம் வகுப்புத் தேர்வையும் நடத்தவில்லை. தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கவில்லை.

இதனால் நாங்கள் 11-ம் வகுப்பில் சேர முடியுமா, ஒரு வருடம் வீணாகி விடுமா என்று தெரியவில்லை. இப்போது இதனால் எங்களுக்கு, தமிழ் வழியில் படிக்காமல் இந்தி, மராத்தி வழியில் படித்து இருக்கலாமோ என்கிற எண்ணம் வருகிறது. கரோனா பயத்துடன் சேர்ந்து இந்த பயத்திலும் இருக்கிறோம்’’.இவ்வாறு அந்தக் கடிதத்தில் மாணவி எழுதியிருக்கிறார். இதற்கு ஆதரவாக கனிமொழி எம்.பி., நாம் தமிழர் கட்சி அமைப்பாளர் சீமான், ஜோதிமணி எம்.பி. ஆகியோரும் அறிக்கை வெளியிட்டனர். ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்பது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது. 


Tags : Mumbai ,Chief Minister ,Tamil Nadu ,Tamil ,Bombay , Bombay Tamil, Students,Letter ,Tamil Nadu ,Chief Minister
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்