×

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2019ம் ஆண்டு ரூ.1,962 கோடியில் தொடங்கப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி: முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணியை திருவாச்சி என்ற இடத்தில முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.1,962 கோடியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி தொடங்கப்பட்டது. இது ஈரோடு,கோவை, திருப்பூரில் 444 ஏரிகளை நிரப்பி நிலத்தடி நீரை செறியூட்டும் திட்டமாகும். இதனையடுத்து, இந்த திட்டம் குறித்த காலத்திற்குள் பணிகளை நிறைவேற்ற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால் அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தளர்வுகளால் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு, மும்முரமாக நடைபெற்று வருகிறது.கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் திட்டமான அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.  பவானி ஆற்றின் உபரி நீரைக் குழாய் மூலம் கொண்டு சென்று சுமார் 1,044 ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளில் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.பவானி காளிங்கராயன் அணைக்கட்டு கீழ்ப்பகுதியில் முதன்மை நீரேற்று நிலையம் தொடங்கி, நல்லகவுண்டன்பாளையம், திருவாச்சி, போளநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி மற்றும் அன்னூர் ஆகிய இடங்களிலும் நீரேற்று நிலையம் அமைக்கும் பணியும், நிலத்தின் அடியில் குழாய் பதித்து அதன் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் பணிக்கான வேலைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணியை முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த திட்டம் குறித்த காலத்திற்குள் திட்ட பணிகளை நிறைவேற்ற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Erode District , Erode District, Atticadavu-Avinasi Project, CM Palanisamy, Study
× RELATED சத்தி அருகே வனப்பகுதியில் டெம்போவில்...