×

நீரிழிவு நோயை தூண்டுகிறதா கொரோனா வைரஸ்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

டெல்லி: கொரோனா வைரஸ் நீரிழிவு நோயை தூண்டுவதற்கான ஆதாரங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளன. திசு ஆய்வுகள் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ள சிலரின் சான்றுகள் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக நேச்சர் பத்திரிக்கை செய்தி  வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 418 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,56,183-லிருந்து 4,73,105-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,476-லிருந்து 14,894-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685-லிருந்து 2,71,697-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நீரிழிவு நோயை தூண்டுவதற்கான ஆதாரங்கள் ஆய்வில் தெரிய வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டைப் 1 நீரிழிவு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்பு செல்கள் மற்றும் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யும் செல்களை அழிக்க தொடங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவும், நீரிழிவும் ஒன்றோடு ஒன்று மோதும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நீரிழிவை கட்டுப்படுத்தும் செல்களை சேதப்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் நீரிழிவு நோயை தூண்டுகிறது என்று மற்றொரு ஆய்வில் கூறப்பட்டிருப்பட்டிருப்பதாகவும் நேச்சர் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நீரிழிவு நோயாளிகளை எளிதாக தாக்குகிறது,  மற்றவர்களை காட்டிலும்  50 சதவிகிதம் எளிதாக தாக்கும் அபாயம் உள்ளதாகவும், இது உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Diabetes, disease, coronavirus, study, trauma, information
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...