×

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம்; வன்முறையில் ஈடுபட்ட ஷாருக்கான் பதானுக்கு ஜாமீன் மறுப்பு: நீதிபதிகள் காட்டம்..!!

டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்ட களங்களில் முக்கியமாக தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வன்முறை வெடித்தது. இதில் வடகிழக்கு டெல்லியில் மவுஜ்பூர் சவுக் பகுதியில்  நடந்த போராட்டத்தின் போது, போலீஸ் காவலர் ஒருவரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டியதாக ஷாருக்கான் பதான் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ஷாருக்கான் பதான் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் நீதிபதி சுரேஷ்குமார் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த ஜாமீன் மனுவில் தன் தந்தைக்கு 76 வயதாகிறது. முதியவர் என்பதால் அவரை பார்த்துக் கொள்ள யாருமில்லை. எனவே, தனக்கு ஜாமீன் அளிக்குமாறு ஷாருக்கான் கோரியிருந்தார். ஷாருக்கான் பதான் வழக்கறிஞர் அக்ஸர் கான், கர்ப்பமாக உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவியும் ஒருங்கிணைப்பாளருமான சூஃபுரா சர்க்காருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஜாமீனை முன்வைத்து ஷாருக்கானுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

இதனையடுத்து இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி சுரேஷ்குமார் கெயித் தெரிவித்ததாவது:  குற்றம் சாட்டப்பட்டவரின் நோக்கம் தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்வதிலேயே இருந்தது. அதனால், இப்போது அவர் சட்டத்தையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். குற்றமிழைத்த போது எல்லோரையும் மறந்து விட்டார். இப்போது, அவருக்கு  வயதான பெற்றோர் நினைவுக்கு வந்து விட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். அதோடு, ஷாருக்கான் பதானுக்கு ஜாமீன் அளிக்கவும் மறுத்து உத்தரவிட்டார்.

கடந்த பிப்ரவரி 24ம் தேதி குடியுரிமை சட்ட  ஆதரவு மற்றும் எதிர்ப்பு கும்பல் டெல்லி  மவுஜ்பூர் சவுக் பகுதியில் மோதிக் கொண்டன. அன்று காலை 11 மணியளவில்  ஷாருக்கான் பதான், துப்பாக்கியால் போலீஸ் கான்ஸ்டபிள் தீபக் தாகியாவை மிரட்டினார். இந்த வழக்கில் ஷாருக்கான் பதான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : fight ,Shah Rukh Pathan , Delhi, Citizenship Act, Violence, Shah Rukh Pathan, Bail, Denial, Judges
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது